Homeவிளையாட்டுயூரோப்பா லீக் - நப்போலி தோல்வி!

யூரோப்பா லீக் – நப்போலி தோல்வி!

பெர்ன், பிப்.23-

2017/18 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி 16 கிளப்புகளுக்கான சுற்றுக்குத் தேர்வுப் பெறுவதில் இத்தாலியின் நப்போலி தோல்வி கண்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் நப்போலி 2 – 0 என்ற கோல்களில் ஜெர்மனியின் ஆர்.பி. லெய்ப்சீக் அணியை வீழ்த்தியது.

எனினும் கடந்த வாரம் நடந்த முதல் ஆட்டத்தில் நப்போலி தனது சொந்த அரங்கில் 1 – 3 என்ற கோல்களில் தோல்வி கண்டது. ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கை 3 – 3 என்ற நிலையில் இருந்தாலும் எதிரணியின் இடத்தில் போடப்பட்ட 3 கோல்களின் அடிப்படையில் லெய்ப்சீக் அணி அடுத்த சுற்றுக்கு தேர்வுப் பெற்றது.

33 ஆவது நிமிடத்தில் நப்போலியின் முதல் கோலை பியோட்டர் சிலின்ஸ்கி அடித்தார். ஆட்டம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது லோரேன்சோ இன்சைன் இரண்டாவது கோலைப் புகுத்தினார். இத்தாலி சிரி ஆ லீக் பட்டத்தை குறி வைத்துள்ள நப்போலிக்கு இந்த தோல்வி மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

latest articles

explore more