Homeவிளையாட்டுஇந்திய சமுதாய இளம் காற்பந்து வீரர்களை உற்பத்தி செய்யும் மையம் மிஃபா!

இந்திய சமுதாய இளம் காற்பந்து வீரர்களை உற்பத்தி செய்யும் மையம் மிஃபா!

ஜோகூர் ஜூலை 29 – 
சமுதாய காற்பந்துத்துறை சார்ந்து நமது இளம் வீரர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மையமாக மிஃபா திகழ்ந்து வருகிறது. நம்மால் உருவாக்கப்படும் விளையாட்டாளர்கள் மற்ற மற்ற அணிகளில் விளையாட வேண்டும். அதன் வழி அவர்கள் பொருளாதார ரீதியில் உயர வேண்டுமென மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் ஜோகூர் இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
நமது நோக்கம் சமுதாயத்தில் அதிகமான காற்பந்து விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டுமென்பதாகும். அதனை மையமாக கொண்டு ஜிஃபா ஒன்றுபட்டு இயங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் மிஃபாவின் கீழ் இயங்கும் மற்ற மாநிலங்களும் இதனை கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். ஜோகூர் மாநிலத்தை பொறுத்த வரையில் டத்தோ எம்.அசோஜன், ரவீன்கிருஷ்ணசாமி போன்ற நல்ல உள்ளங்கள் இங்கே இருக்கின்ற நிலையில் உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜிஃபாவின் தலைவர் பி.எம்.தாஸ் அவர்கள் காலத்திற்கேற்ற விவேகமான தலைமைப்பண்பை கொண்டவர். அவரின் தலைமையில் செல்வராஜன், மதியழகன், மணியம் உள்ளிட்டவர்கள் செயலாற்றி வருகின்றார்கள்.  நமக்கான களமாக மிஃபா இருக்கின்ற  நிலையில் தரமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி, அவர்களை உருவாக்கி  நமது அணியில் மட்டுமில்லாது மற்ற அணிகளிலும் விளையாட வாய்ப்புக்களை உருவாக்குவோம்.
காற்பந்துத்துறையை பொறுத்த வரையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அடைவு நிலையை நமது இளைஞர்கள் எட்ட முடியும். இதன் வழி சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
spot_img

latest articles

explore more