பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவிஞர் சினேகன் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறிவரும் நிலையில், அவரை சக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரே கலாய்த்துள்ளார்.

சினேகன் மற்றும் நடிகர் சக்தி ஆகியோருக்கு ஹேர்கட் செய்வதற்காக சலூனில் இருந்து ஒரு ஆண் மற்றும் பெண் வந்திருந்தனர். ஹேர்கட் முடிந்தபிறகு அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது சினேகன் அந்த பெண்ணின் மீது தன் கையை வைத்தார்.

அதை பார்த்த சக்தி கை எடுப்பா.. இதுதான் சாக்குனு மேலே கை போட்டுக்கிட்டு என கூறி சினேகனை கலாய்த்துவிட்டார்.