அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சாம்பியன்ஸ் லீக் – மீண்டும் அரையிறுதி ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக்
விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் – மீண்டும் அரையிறுதி ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக்

மூனிக், ஏப்.12 –

சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் மீண்டும் தகுதிப் பெற்றுள்ளது. வியாழக்கிழமை அலியான்ஸ் அரேனாவில் நடந்த இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் கோல் ஏதுமின்றி ஸ்பெயினின் செவியாவுடன் சமநிலைக் கண்டது.

கடந்த வாரம் முதல் காலிறுதி ஆட்டத்தில் 2 -1 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த பாயேர்ன் மூனிக் அதே ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதிப் பெற்றது. கடந்த 9 ஆண்டுகளில் பாயேர்ன் மூனிக் ஏழாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு தேர்வாகியுள்ளது.

அலியான்ஸ் அரேனாவில் நடந்த ஆட்டத்தில் 59 ஆவது நிமிடத்தில் செவியா ஆட்டக்காரர் ஜாக்குவேன் கொரியா முதல் கோலைப் போட்டிருக்கக்கூடும். எனினும் அவர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 2013 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பாயேர்ன் மூனிக் வென்றபோது யாப் ஹென்கேஸ் நிர்வாகியாக இருந்தார். தற்போது மீண்டும் யாப் ஹன்கேசின் நிர்வாகத்தின் கீழ் பாயேர்ன் மூனிக் அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன