முகப்பு > விளையாட்டு > உண்மையாகவா ??? ஹாரி கேனை நக்கலடித்த முஹமட் சாலா!
விளையாட்டு

உண்மையாகவா ??? ஹாரி கேனை நக்கலடித்த முஹமட் சாலா!

லண்டன், ஏப்.11 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்டோக் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரி கேன் போட்ட கோலை நடுவர் முதலில் அங்கீகரிக்கவில்லை. கிறிஸ்டியன் எரிக்சன் அடித்த பிரீ கீக் பந்து நேரடியாக வலைக்குள் புகுந்ததாக நடுவர் முடிவு செய்தார்.எனினும் பந்து வலைக்குள் நுழையும் முன்னர் தமது காலில் பட்டதாக ஹாரி கேன் வாதிட்டார். இந்நிலையில் ஹாரி கேன், அந்த கோல் தொடர்பில் பிரீமியர் லீக் கோல் அங்கீகாரம் குழுவிடம் முறையிட்டிருந்தார்.

ஸ்டோக் சிட்டி ஆட்டத்தில் போடப்பட்ட இரண்டாவது கோலை மறு ஆய்வு செய்த அந்த குழு தற்போது ஹாரி கேன் அந்த கோலைப் போட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லிவர்பூல் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாரி கேன் டுவிட்டரில் …ஹூம்ம் ..உண்மையாகவா என நக்கலடித்துள்ளார்.

காரணம் பிரீமியர் லீக் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரர்களுக்கான போட்டியில் முஹமட் சாலாவுக்கும் ஹாரி கேனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஹாரி கேன் 25 கோல்களைப் போட்டுள்ள வேளையில், முஹமட் சாலா 29 கோல்களைப் போட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன