பெர்லின்,ஏப்.24-
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தேர்வு பெற இலக்குக் கொண்டுள்ள பாயேர்ன் மூனிக் , ரியல் மாட்ரிட்டைக் கண்டு அஞ்சக்கூடாது என அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆர்யன் ரோபன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் காலிறுதி சுற்றில் இவ்விரண்டு அணிகளும் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 6- 3 என்ற ஒட்டு மொத்த கோல்களில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு ஆட்டங்களிலும் கோல் அடித்தார்.
இந்நிலையில் புதன்கிழமை ரியல் மாட்ரிட்டை சந்திக்கவுள்ள பாயேர்ன் மூனிக், எந்த ஒரு பயமும் இன்றி அந்த அணியை எதிர்கொள்ள வேண்டும் என ரோபன் தெரிவித்தார். கடந்த ஆண்டில் சொந்த அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக ரியல் மாட்ரிட்டைக் கண்டு பயத்துடன் விளையாடியதாக ரோபன் கூறினார்.
இந்த முறை பாயேர்ன் மூனிக் அந்த தவறை செய்யக்கூடாது என ரோபன் தெரிவித்தார். கடந்த ஆண்டில் அலியான்ஸ் அரனேவாவில் 1 – 2 என்ற கோல்களில் தோல்வி கண்ட பாயேர்ன் மூனிக், இரண்டாவது ஆட்டத்தில் 4 என்ற கோல்களில் மண்ணைக் கவ்வியது. பாயேர்ன் மூனிக்கிற்கு எதிரான கடைசி ஐந்து ஆட்டங்களிலும் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் லா லீகா போட்டியில் தடுமாறினாலும் ரியல் மாட்ரிட், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


