ஈப்போ, ஏப்.24
எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் வெறுப்புக் கொள்ள வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இறுதி முடிவு வாயிலாகவும் செயல்முறை வாயிலாகவும் தற்போதை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படாதவர்கள் பெரும்பாலோர் வருத்தத்துடன் இருப்பதால் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து தேர்வுச் செய்யப்பட்டதை நினைத்து அதிகமாக யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு தேர்வுச் செய்யப்படாதவர்கள் இடையே பிரச்னை ஏதும் இருந்தால் அதை உடனடியாகத் தீர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பேரா மாநில தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கான அதிகாரத்தை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸாஹிட் இதனை குறிப்பிட்டார்.


