இந்திய மகளிர் அணி மலேசியாவை வீழ்த்தியது

0
10

கோலாலம்பூர்:

இந்திய மகளிர் கால்பந்து அணி நட்பு ரீதியிலான தொடரில் விளையாட மலேசியா சென்றுள்ளது. நேற்று கோலா லம்பூரில் உள்ள எம்.பி. செலயாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் மலேசிய அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதியில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இந்தியாவின் பியாரி சாக்சா 79வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தார். அடுத்து 83வது நிமிடத்தில் மறுபடியும் சாக்சா கோல் அடித்தார். மலேசிய அணியின் கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே, இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.