புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?

கோலாலம்பூர், மே. 13-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் அதை மறுத்துள்ளார்.

ஜாலான் ராஜா சுலானில் உள்ள அந்த அடுக்ககத்தில் உள்ள ரகசிய சிசிடிவி கேமராவை மட்டுமே போலீஸ் சோதனையிட்டதாகவும் அவர் பெர்னாமாவிடம் கூறியுள்ளார். முன்னதாக டத்தோஶ்ரீ நஜீப்பின் துணைவியார் தமது ஆடம்பர நகைகளையும் பொருட்களையும் இடமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்ற புகாரை பெர்சாத்து கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்வைத்தார். அதனால் போலீஸ் சிசிடிவியை பார்வையிட்டதாகவும் டத்தோஶ்ரீ மஸ்லான் கூறியுள்ளார்.

இதனிடையே போலீஸ் சிசிடிவியை கண்காணித்ததே தவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். இதனிடையே ராய்ட்டர்ஸ் மற்றும் இதர இளையத்தள செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்றார் அவர்.

முன்னதாக 20 பேர் கொண்ட போலீஸ், டத்தோஶ்ரீ நஜீப்பின் அடுக்க்ககத்தில் நுழைந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் நேற்று கூறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன