கோலாலம்பூர், மே 13-
இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான வீடு இருக்கும் சாலையை போலீஸ் இன்று தொடங்கி கண்காணிக்க தொடங்கியுள்ளது.
அவரது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரிண்டன் முஹம்மட் ரஃபிக் முஹம்மட் முஸ்தாபா தெரிவித்தார்.
அந்த வீட்டை பாதுகாக்கும் வகையில் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக பெர்னாமா செய்தி பிரிவிடம் அவர் கூறினார். இதுவரையில் சுமார் 5 போலீஸ்காரர்கள் நஜீப்பின் வீட்டிற்கு செல்லும் சாலையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் நுழையும் மற்றும் வெளியே செல்லும் தரப்பினர்களிடமும் அவர்களது வாகனங்களிலும் சோதனையை மேற்கொள்வதற்கு நடமாடும் போலீஸ் நிலையத்தையும் அங்கு அனுப்பப்படவுள்ளது.
இந்த உத்தரவு நேற்று இரவில் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த சாலையில் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

