அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் பதவி விலகினார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் பதவி விலகினார்

கோலாலம்பூர், மே 14-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) தலைவர் பதவியிலிருந்து டத்தோ சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று நாட்டின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சாவிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.

இன்று புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அலி ஹம்சா மற்றும் முதன்மை அரசாங்க அதிகாரிகளை சந்தித்தார்.

சூல்கிப்ளியின் பதவி விலகல் கடிதம் அனுமதிக்காக மகாதீருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இடத்தை யார் நிரப்புவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன