கோலாலம்பூர், மே 14-

1எம்டிபி முறைகேடு மீதான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.

நான் இன்னமும் பணியில் இருக்கிறேன். என்னை சம்பந்தப்படுத்திய எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என என்.எஸ்.டி.யிடம் அவர் கூறியுள்ளார்.

மலேசிய உள்கட்டமைப்பு நிறுனத்தின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ காலிட் கடந்த ஆண்டு போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 260 கோடி சேர்க்கப்பட்டது தொடர்பிலும் 1எம்டிபி ஊழல் தொடர்பாகவும் அமைக்கட்ட விசாரணைக் குழுவில் டான்ஶ்ரீ காலிட்டும் இடம்பெற்றிருந்தார்.

நஜீப் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 260 கோடி, 1எம்டிபி நிதி என வெளிநாட்டு விசாரணைகள் கூறின. ஆனால் அந்த பணம் சவூதி மன்னர் வழங்கிய நன்கொடை என கூறப்பட்டது.

மக்களின் பணத்தை தமது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தினார் என்ற குற்றசாட்டு எழுந்த போதும், அது நன்கொடையென விசாரணை முடிந்தது.

தற்போது 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் 1எம்டிபி மீதான விசாரணை தொடக்கப்படுமென பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

முதல்கட்டமாக மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் விசாரிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் முன்னாள் போலீஸ் படைத் தலைவரான காலிட்டும் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.