அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதிய சட்டத்துறை தலைவர் பதவிக்கு அம்பிகா பெயர் பரிந்துரை
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

புதிய சட்டத்துறை தலைவர் பதவிக்கு அம்பிகா பெயர் பரிந்துரை

புத்ராஜெயா, மே 14-
டான்ஸ்ரீ அபாண்டி அலிக்கு பதிலாக புதிய சட்டத்துறை தலைவர் பதவிக்கு டத்தோ அம்பிகா சீனிவாசனை நியமனம் செய்வதற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அதன் தலைவர் ஜோர்ஜ் வருகீஸ் கூறுகையில், அம்பிகா அரசியல்வாதி இல்லை என்பதால் வழக்கறிஞர் மன்றம் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டத்துறை தலைவர் பதவிக்கு அவரே சிறந்த வேட்பாளராக இருப்பதாக தெரிவித்தார்.

அம்பிகா புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டால் அந்த துறை அரசியல் தலையீடு மற்றும் எவ்வித தாக்கங்களும் இன்றி செயல்படுவதை உறுதி செய்வார். சட்டத்துறை தலைவர் நல்ல பண்புகளைக் கொண்டிருப்பதோடு பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இனம், சமயம், பாலினம் ஆகியவற்றின் தாக்கங்கள் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இந்த தகுதிகள் அனைத்தையும் நிரப்பக்கூடிய தலைவராக அம்பிகா இருக்கின்றார். அதோடு, அவர் நேர்மையான பொதுத்தேர்தலை வலியுறுத்தி வந்த பெர்சேவிற்கும் தலைவராக இருந்திருக்கிறார் என ஜோர்ஜ் வருகீஸ் கூறினார்.

நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோர்ஜ் வருகீஸ் சட்டத்துறை அலுவலகத்தை அரசு சட்டத்துறை அலுவலகத்திலிருந்து பிரிக்க வேண்டும் என ஜோர்ஜ் வருகீஸ் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு முன்னர், 1எம்டிபி ஊழல் மீதான வழக்கை நடப்பு சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி மூடுவதற்கு முயற்சித்ததாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அதனை மறுத்து வந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன