வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அன்வார் விடுதலையாவது தாமதமாகலாம்! -பிரதமர் துன் மகாதீர்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அன்வார் விடுதலையாவது தாமதமாகலாம்! -பிரதமர் துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 14-

பிகேஆர் கட்சியின் முதன்மை தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை பெறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

அன்வாரை விடுதலை செய்வோம் என்ற நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கான நடைமுறையில் கால தாமதம் ஆகும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கிவிட்டார். இருப்பினும் சட்ட விதிமுறையில் கால தாமதம் ஆகலாம் என்பதையும் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிக் துன் மகாதீர் தெரிவித்தார்.

முன்னதாக பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் அன்வாரின் மகளுமான நூருல் இஷா அன்வார் நாளை மாலை விடுதலை செய்யப்படுவார் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன