Homeஅரசியல்ஆட்சி மாறிவிட்டது! நாம் மாறுவது எப்போது?

ஆட்சி மாறிவிட்டது! நாம் மாறுவது எப்போது?

(இராமநாதன் பன்னீர்செல்வம்)

நாட்டின் ஆட்சி மாறியது, மலேசியர்களுக்கு மறுமலர்ச்சி, புதிய மலேசியா இப்படி பலவிதமாகபுகழாரங்கள் நம் காதுகளை அலங்கரித்து வருகின்றன. அரசியல் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். இந்தமாற்றத்திற்கு ஏற்ப நமக்கு சிந்தனை மாற்றம்ஏற்பட்டுள்ளதா? மலேசிய இந்தியர்களின் சிந்தனைமாற்றம் எப்படி இருக்கலாம் என்பதற்கு இது ஒருபிள்ளையார் சுழி.

ஜாதி பேசுவதை நிறுத்து. மார்தட்டி ஜாதிபரைசாற்றுபவனை விரட்டி அடி. ஜாதி அரசியல் நம்நாட்டிற்குத் தேவையில்லை. இந்நாட்டில் நீ வாழ்வதும்வீழ்வதும் உன் உழைப்பை பொறுத்தே இருக்கும். ஜாதிஎன்ற கிருமி சிறிதளவும் உன்னை உயர்த்தி இருக்காது. நாம் அனைவரும் மலேசியர்கள் என பெருமைகொள்வோம். நம் இந்தியர்கள் அனைவருமே நமதுஉறவுகள் என்ற ஒற்றுமை சிந்தனையோடுசெயல்படுவோம்.

அரசியல் பேசு. விவேகமாக பேசு. அதற்கு முன்வாக்காளர்களாக பதிந்து கொள். இந்தியா அரசியல்நமக்குத் தேவையில்லை. நம் நாட்டு அரசியலை முழுமையாக தெரிந்துக்கொண்டு பின் பேசு. உன்னைமுதலில் உயர்த்திக் கொள். பிறகு நாட்டைப் பற்றி யோசிபின் செயல்படு.

தலைவனுக்கு விசுவாசமாக இரு. கூஜா தூக்காதே. நமது முன்னோர்கள் பழைய அரசாங்கத்திற்கு கொடியும்பதாகைகளும் ஏந்தினார்கள். இன்றைய இளைஞர்கள் இன்றைய அரசாங்கத்திற்கு காணொளியையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து தலைவர்களுக்கு ஜால்ட்ரா அடிப்பதையும் ஒப்பிட்டால் பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அமைதியாய் இரு. தேவைபடும் போது பேசு.விசுவாசம் மனதில் இருந்தால் போதும்.

உன் இனத்தை அசிங்கப்படுத்தி பெருமை தேடாதே.

நம் இனத்தவர்களை பார்த்தால் வணக்கம் சொல்அல்லது புன்னகை செய்.

மலாய் மொழியையும் ஆங்கில மொழியையும் பேசக்கற்றுக் கொள். வங்காளதேசியும் நேப்பாளியும் நன்றாகமலாய் பேசும் போது, இங்கேயே பிறந்த உனக்கு என்னகேடு? தாய்மொழியை மறவாதே. நம் மொழியைகொல்பவனை துரத்தியடி.

சினிமா பார். அதையே வாழ்க்கையாக்காதே. நடிகர்களுக்கு சங்கம் இங்கே தேவையில்லை. நடிகர்களையும் நடிகைகளையும் புகழ்ந்து பேசிநேரத்தை வீணடிக்காதே. நாம் மலேசியர்கள். நமதுபூர்வீக நாட்டை பின்பற்றி இங்கே அந்த வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை.

முதியவர்கள் நாடகம் பார்ப்பதை நிறுத்திக் கொண்டுநாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் கை கொடுங்கள். முதியவர்களும் நாட்டின் தலை எழுத்தை மாற்ற முடியும்என்பதை நம் இன்றைய அரசியல் சூழல் நிருபித்துள்ளது. வீட்டில் உட்கார்ந்து வீர வசனம் தேவையில்லை.

துணி தைப்பது, பூ கட்டுவது இப்படி நமது பூர்வீகதொழிலை தவிர்த்து புதிய தொழில்நுட்ப தொழில்களில் ஈடுபடுங்கள். கைத்தொழில் கற்பது சாலச்சிறந்தது.

கோவில்கள் கட்டுவதை நிறுத்தி நம் இனபிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பணம் சேருங்கள். திருவிழாக்களுக்கும் பண்டிகைகளுக்கும் ஓய்வு எடுப்பதை நிறுத்தி விட்டு பணம் சம்பாதிக்கும் வழியைத்தேடுங்கள். கலை கலாச்சாரங்களைப் பின்பற்று. மாற்றாதே.

இன்னும் 20 ஆண்டுகளில் உலகத்தில் ஏற்படும் புதியவேலை வாய்ப்புகளை கண்டறிந்து அந்த படிப்பைபடியுங்கள். அறிவியல் கணிதம் நிச்சயம் நமக்குத்தேவை.

உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பேசாதீர்கள். அறிவார்ந்த பேச்சே நமக்குத் தேவை.

ஆட்சி மாறினாலும் நீ உன்னை மாற்றாவிட்டால் கடவுளே உனக்கு வரம் கொடுத்தாலும் உன் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்.

நாம் மலேசியர்கள், நம் தாய் நாடு மலேசியா!!. நம் இனத்தை மற்றவர்கள் புகழ்ந்து பேசும் படி உயர்த்திக்காட்டுவோம். தமிழர்களாக இருப்போம், மலேசியர்களாக வாழ்வோம்.

இந்த கட்டுரை அநேகன் வாசகர் இராமநாதன் பன்னீர்செல்லம் அவர்களின் தனிப்பட்ட கருத்து. இது அநேகனின் நிலைப்பாடு அல்ல. ஆசிரியர்

spot_img

latest articles

explore more