புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்க செயற்குழு!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்க செயற்குழு!

கோலாலம்பூர், மே 14-
14ஆவது பொதுத்தேர்தலுக்காக நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்க அரசாங்கம் வெகு விரைவில் செயற்குழு ஒன்றை அமைக்கவுள்ளது.

பெர்சாத்து கட்சியின் வியூக மற்றும் கொள்கை பிரிவு தலைவர் ராயிஸ் ஹூசேன் கூறுகையில், இந்த செயற்குழுவில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஹராப்பான் கூட்டணியிலுள்ள உறுப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் முதலானோர் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

100 நாட்கள் நிர்வாகத்தில் மக்களுக்கு 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்பட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்க தேர்தல் அறிக்கை கண்காணிப்பு செயற்குழு அமைக்கப்படும். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மலேசிய மக்களுக்கு சிறந்தனவற்றை வழங்கும் வகையில் நல்ல மேம்பாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என ராயிஸ் ஹூசேன் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் ஹராப்பான் கூட்டணி 194 பக்கங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. இதில், பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அகற்றம், சம்பள உயர்வு அல்லது குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துதல், 1எம்.டிபி, பெல்டா, தாபுங் ஹாஜி முதலான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அரச ஆணையம் (ஆர்.சி.ஐ) முதலானவை அமைக்கப்படும் என அக்கூட்டணி உறுதியளித்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன