வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மெஸ்சியின் மாய ஜாலத்துக்காக காத்திருக்கும் ரசிகர்கள் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மெஸ்சியின் மாய ஜாலத்துக்காக காத்திருக்கும் ரசிகர்கள் !

மாஸ்கோ, ஜூன்.16 –

ஃபிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இன்று  டி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் அர்ஜெண்டினா விளையாட உள்ளது. லியோனெல்ஸ் மெஸ்ஸியின் மேஜிக்கை காண்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும் அர்ஜெண்டினா, கடந்த 12  உலகக் கிண்ணப் போட்டிகளில் 11 போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. 2002 ஆம் ஆண்டில் மட்டுமே குழுப் பிரிவிலேயே  வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.கடைசியாக நடந்த மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளிலும் குழுப் பிரிவுக்கான ஆட்டங்களில் அர்ஜெண்டினா முதலிடத்தைப் பிடித்தது.

 ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கிண்ண போட்டியில் நுழைந்துள்ளது. 2016ல் யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கிண்ணப் போட்டியில்  இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸியைத் தவிர மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர் மேக்ஸ்மிலானோ மீசா.  தாக்குதல் ஆட்டக்காரர்  மேனுவேல் லான்சிலி இல்லாததால், மெஸ்ஸியுடன் இணைந்து பந்தைக் கடத்திச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் உள்ளார் .ஐஸ்லாந்து – ஜில்பி சிகுர்ட்சன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 2016 யூரோவில் கலக்கிய ஜோகான் பெர்க் குட்முட்சன் உலகக் கிண்ணப் போட்டியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1978, 1986ல் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜெண்டினா மீண்டும் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு தற்போது உள்ளதாகக் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் லியோனல் மெஸ்ஸி. கால்பந்து உலகின் தலைச் சிறந்த வீரராக உள்ள அவர், கடந்த உலகக் கிண்ண போட்டியில் இறுதி ஆட்டம் வரை அணியை அழைத்துச் சென்றார். கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்ட அவர், உலகக் கிண்ணத்தை வென்று, தனது திறமையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன