(மதியழகன் முனியாண்டி)

முன்னுரை.

  1. இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் பல மாற்றங்களுக்கும்; நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும்; மலேசிய அரசியல் நகர்வு முற்றிலும் புதிய திசையில் பயணிப்பதற்கும் 1MDB ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

2. துன் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு திரும்பியதற்கும்; இன்று நமது நாட்டின் ஏழாவது பிரதமராகவும் பாரிசான் கூட்டணி கட்சி சேராத; பக்காத்தான் கூட்டணியின் முதல் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு 1MDB என்கிற உலக மெகா ஸ்கேண்டல் காரணமாக அமைந்தது.

3. நமது நாட்டின் அரசியல் க்ளைமேட் மாறியதற்கு 1MDB என்று அழைக்கப்படுகிற, கண்ணுக்கு தெரியாத உருவம்; அசல் காரியவாதியாக இருந்துள்ளது.

4. எல்லாமும் ஆரம்பித்தது 1MDB-யில் தான். துன் மகாதீர் வெளிப்படையாக நஜிப்பின் அரசாங்கத்தையும் பாரிசானையும் எதிர்க்க ஆரம்பித்தது 1MDB விவகாரத்தில்தான். பாரிசான் கூட்டணியை அடித்து நொறுக்கி ஒரு மூலையில், கூனி குறுகி உட்கார வைத்திருப்பதும் 1MDB சர்ச்சையினால் ஏற்பட்டது.

5. ஜோலோ(Jho Low), ரீசா அசிஸ்(Riza Aziz), அருள் கந்தா(Arul Kanda), 2.6 பில்லியன், அம்பேங்க்(AmBank), பெட்ரோ சவுடி(Petro Saudi), கேமேன் ஐலண்ட்(Cayman Island), அரபு நன்கொடையாளர்(Arab donor), Sarawak Report, Justo என்று பல பெயர்கள் மக்களிடையே பேசும் பொருளாகவும், எழுதும் விசயமாகவும் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறது.

6. 1MDB என்றால் என்ன? அது எப்படி உலக மெகா ஸ்கேண்டல் ஆனது? 1MDB-யில் என்ன-என்ன முறைகேடுகள் நடந்துள்ளது? யார்-யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? 1MDB முறைகேடுகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று இங்கு பலருக்கும் தெரியவில்லை.

7. நஜிப் 1MDB-யில் பணத்தை கொள்ளையடித்து விட்டார் என்கிற நிலையில்தான் இன்று பலரும் 1MDB குறித்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் 1MDB குறித்து படிக்க முயன்று எதுவும் புரியாமல் பின்வாங்கி விட்டார்கள்.

8. 1MDB குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று உட்கார்ந்த போது; எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறி போனேன். 1MDB முறைகேடுகள் உலகம் முழுவதும் ஏறத்தாள 11 நாடுகளில் நடந்துள்னன. உலகின் மிக முக்கியமான சுமார் 15 மனிதர்கள் சம்பந்தப்பட்டுள்ளார். உலகின் பிரபலமான சிலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அத்துனையும் ஆச்சர்யமான தகவல்கள்.

9. 1MDB கதையை எப்படி குழப்பாமல், தெளிவாக படிப்பவர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுதுவது என்று தெரியாமல் தவித்தேன். இதுவரை 200-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியிருப்பேன். ஆனால் 1MDB குறித்து எழுதுவது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

10. டஜன் கணக்கில் பெயர்களும், ஊர்களும், சம்பவங்களும் 1MDB-யில் அடங்கியுள்ளது. கொஞ்சம் பிசிகினாலும் படிப்பவர்களுக்கு போர் அடித்து விடும். அல்லது புரியாமல் போய்விடும்.

11. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். 1MDB குறித்து ஐந்து வெவ்வேறு தலைப்பில்; ஐந்து சீரியல்கள் எழுத வேண்டும். அதில் மிக எளிமையாக எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் முக்கியமான சம்பவங்களையும், முறைகேடுகளையும் தொகுத்து எழுத வேண்டும்.

12. இந்த சீரியல் கட்டுரையில் 1MDB குறித்து முக்கியமான முறைகேடுகள், சம்பவங்கள், ரகசியங்கள் இவைகளை சுருக்கமாக சொல்ல முனைந்துள்ளேன். இன்னும் ஆழமாக படிக்க விரும்புகிறவர்கள்; இந்த கட்டுரையில் இருக்கும் முக்கியமான குறிப்புகளைக் கொண்டு இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

13. 1MDB குறித்து எழுதுவதற்கு இந்த ஐந்து சீரியல்கள் போதாது. பொன்னியின் செல்வன் தடிமத்துக்கு ஒரு தனி புத்தகமே போட வேண்டும். இந்த கட்டுரையின் நோக்கம், 1MDB என்றால் என்ன என்று அடிப்படை கதையை தெரிந்துக் கொள்ள வேண்டும். இது தொடர்ந்து 1MDB குறித்து வாசிப்பதற்கும் தெரிந்துக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

14. 1MDB விவகாரத்தை பொறுத்தமட்டில், நாம் இப்போது இடைவேளையில் இருக்கிறோம். இனிதான் 1MDB விசாரணையின் போக்கு எப்படி நகர போகிறது என்று தெரியும். 1MDB-யின் உண்மையான விசாரணையே இனிமேல்தான் ஆரம்பமாக போகிறது. க்ளைமேக்ஸ் அடைவதற்குள் நமக்கு பேரதிர்ச்சிகளும், பல சுவரசியாமான ட்விஸ்ட்-களும் காத்திருக்கிறது.

15. 1MDB குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதைவிட; ஏதோ சுமாராக, ஓரளவுக்கு, கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வோம். மைக்ரோவாக பிரித்து உள்நுழைந்து பார்தோமேயானால் நாம் அனைவரின் பணமும் ஏதோ ஒரு வகையில் 1MDB-யில் சிக்கிக் கொண்டுள்ளது. அல்லது 1MDB முறைகேடுகளால் நாம் பாதிக்கப்பட்டிருப்போம்.

  1. 1MDB உருவான கதை. 2. 1MDB-யில் யார்-யார் சம்பந்தப்படுள்ளார்கள்? 3. எந்த-எந்த நாடுகளில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளது? 4. 1MDB முறைகேடுகள்(1MDB Wrongdoing). 5. 1MDB முறைகேடுகளில் இருந்து நஜிப் தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுத்த நடவடிக்கைகள் என ஐந்து தலைப்புகளில் ஐந்து சீரியல்கள் எழுத போகிறேன்.

Lets Starts the 1MDB journey. 1 Malaysian Development Berhad. 1MDB Rocks.

1MDB உருவான கதை.

திரங்கானு

  1. திரங்கானு மாநிலத்திலிருந்து பெறப்படும் பெட்ரோல் மற்றும் எரிவாயு(Oil and Gas) உற்பத்திக்கு வழங்கப்படும் உரிம தொகை(Royalty) நியாமான முறையில் வழங்கப்படவில்லை என நெடுங்காலமாகவே திரங்கானு சுல்தான் அதிருப்தில் இருந்தார்.

2. இந்த அதிருப்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பெட்ரோல் மற்றும் எரிவாயுக்கான ராயல்டி தொகையாக 5.2 பில்லியன் மட்டுமே மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் முறைப்படி 7.3 பில்லியன் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

3. Based on report, between March 2004 and 2007, the state government had supposedly received RM 7.3 billion. However, it has been brought up in parliament that the amount received by the state government only 5.2 billion. – The Edge Dec 2008.

4. இந்த காலகட்டத்தில் திரங்கானு சுல்தான், சுல்தான் மிசான் சைனால் அபிடின் நாட்டின் பேரரசராகவும்(Agong ke-13, Tahun 2007-2011)  துன் படாவி நாட்டின் பிரதமராகவும்(2003- April 2009) பதவி வகித்தார்கள்.

5. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளில்; பெட்ரோல் உற்பத்தியிலிருந்து கிடைக்கும் லாப பணத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து நாட்டின் பொருளாதர உயர்வுக்கு வளப்ப நிதி (Soveireign wealth fund/Dana Kekayaan Negara) நிருவனம் ஆரம்பிப்பதுண்டு.

6. பொதுவாக எண்ணை உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில் எல்லாம் இது போன்ற Soveireign wealth fund ஆரம்பிப்பதுண்டு. இந்த நிதியின் மூலம் உலகம் முழுவதும் பல நாடுகளில், பல துறைகளில் முதலீடு செய்யப்படும்.

7. அரபு நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட நிதி நிருவனங்கள் நல்ல லாபத்தைக் கொடுத்ததோடு நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது. இது போன்ற ஒரு முதலீட்டு திட்டத்தை திரங்கானு மாநிலத்தில் உருவாக்க திரங்கானு சுல்தான் முன்மொழிந்தார். இதன் மூலம் திரங்கானு மாநிலம் வளர்ச்சியடையும் அதே வேளையில், திரங்கானு மாநிலத்துக்கு முறைப்படி வந்து சேர வேண்டிய பெட்ரோல் மற்றும் எரிவாயு ராயல்டி தொகைக்கும் உத்திரவாதம் கிடைக்கும் என்று நம்பினார்.

8. அபுதாபி மன்னர் ஷேக் முகமட் ஷயேட் (Sheikh Mohamed Zayed Al-Nahyan), Mubadala Development Co-orparation என்கிற அபுதாபி வளப்ப நிதி (Soveireign wealth fund) ஆரம்பித்து மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். திரங்கானு சுல்தான், அபுதாபியோடு இணைந்து முதலீட்டு நிருவனம் ஆரம்பிக்க ஆர்வம் கொண்டார்.

9. திரங்கானு சுல்தான் முன்மொழிந்த இந்த திட்டத்துக்கு, அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவி ஏற்றுக் கொண்டு திரங்கானுவில் வளப்ப நிதி (Dana Kekayaan Negara) நிருவனம் ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கினார்.

10. மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இணைந்து கூட்டு நிருவனம் ஒன்றை உருவாக்க முடிவானது. அந்த நிருவனம் TIA. Terengganu Investment Autority.

Terengganu Investment Autority(TIA)

1. TIA என்பது திரங்கானு சுல்தான் மிசான் சைனால் அபிடின்  ஐடியாவில் உருவாக்கப்பட்டது. மாநில அரசு 50 விழுகாட்டு பங்கும் மத்திய அரசு 50 விழுகாட்டு பங்கும் கொண்டிருந்தது.

2. 2008-ஆம் ஆண்டில் TIA – Terengganu Investment Autority 11 பில்லியனில் முதலீடு செய்யப்பட்டது. மாநில அரசு 5 பில்லியனும், மத்திய அரசு 6 பில்லியன் மதிப்பு கொண்ட அரசாங்க உறுதி பத்திரத்தை(Central Government-guranteed bonds) கொடுத்தது.

3. TIA – Terengganu Investment Autority மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு நிதி முதலீட்டு நிருவனம். இதன் ஆலோசனை மன்ற தலைவராக மாநில சுல்தான் பதவி வகிப்பார். மாநில மந்திரி பெசார் இயக்குனர்கள் குழுவில் அங்கம் வகிப்பார்.

4 இது அரசியல் சாராத, மாநில அரசாங்க கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிருவனம். சுல்தான், இயக்குனர்கள் வாரியம், மாநில மந்திரி பெசார் தலைமையில் செயல்படும். பொருளாதர நிபுணர்களும், முதலீட்டு அறிஞர்களும் இந்த நிர்வாக வாரியத்தில் முக்கிய பங்கு வகிப்பர்.

5. திரங்கானு சுல்தான் ஆலோசனை மன்ற தலைவராகவும் , மாநில மந்திரி பெசார் அகமாட் சாயிட் இயக்குனர்கள் வாரியத்தில் உறுப்பினராகவும், பிரதமரும் நிதியமைச்சருமான துன் படாவி மேற்பார்வையில் TIA – Terengganu Investment Autority இயங்கியது. டத்தோ ஷரோல் அஸ்ரால் (Datuk Shahrol Azral Ibrahim Helmi) தலைமை செயல்முறை அதிகாரிகாக (CEO) நியமிக்கப்பட்டார்.

6. TIA – Terengganu Investment Autority ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடையாத நிலையில்; டத்தோ அப்துல் அசிஸ் முகமட் அக்ஹிர் (Datuk Abdul Aziz Mohd) மற்றும் ஜோ லோ@லோ தேக் ஜோ (Jho Low@ Low Taek Jho) சிறப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

7. ஹாங்காங் நாட்டில் நிதி நிருவனம் நடத்தி வந்த ஜோ லோ; பெட்ரோல் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில் நெருங்கிய தொடர்ப்பில் இருந்தவர். ஜோ லோவின் வங்கியில் அரபு நாடுகளின் வளப்ப நிதி நிருவனங்கள் (Sovereign Wealth Fund) வங்கி கணக்கு வைத்திருந்தார்கள். Kuwait Investment, Mudabala, Petro Saudi போன்ற நிருவனங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தார்.

8. ஆகையால் TIA – Terengganu Investment Autority-வுக்கு ஜோ லோவை சிறப்பு ஆலோசகராக நியமிக்க அபுதாபி மன்னரால் சிபாரிசு செய்யப்பட்டார். அப்போதைய பிரதமர் அப்துல்லா படாவியும் இதற்கு இணங்கினார்.

9. ஆரம்பத்தில் Real Estate, Hospitality and Invesment போன்ற துறைகளில் முதலீடு செய்வதாக ஆலோசனை செய்யப்பட்டது.

10. TIA – Terengganu Investment Autority, அபுதாபியின் Mubadala Development Co-orparation நிருவனத்துடன் Joint Venture(JV) ஆரம்பித்தார்கள். இந்த JV கம்பனி அரபு நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கியது. மலேசியாவிலும் முதலீடு செய்ய முன் வந்தது.

11. இதன் முதல் கட்டமாக திரங்கானுவில் 1200 ஏக்கரில் தங்கும் விடுதி மற்றும் வில்லா (Hotel and Villa’s) கட்டுவதற்கு முடிவானது. நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் மாநில அரசாங்கம் இறங்கியது.

12. ஆனால் ஒரே வருடத்தில் TIA – Terengganu Investment Autority-இல் சிக்கல்கள் எழுந்தது. மாநில மந்திரி பெசார் அக்மாட் சாயிட் TIA – Terengganu Investment Autority நிதியை முழுமையாக கண்ட்ரோல் செய்ய தொடங்கினார். TIA – Terengganu Investment Autority நிருவாகத்தில் தலையிட தொடங்கினார். இதனால் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்துக்கும் சிக்கல்கள் எழுந்தது.

13. Islamic Medium Term Notes முதலீட்டுக்கு பணவர்த்தனை நடந்த அம்பேங்க் நிருவன விவகாரத்தில், மாநில மந்திரி பெசார் அகமாட் சாயிட்க்கும், தலைமை நிர்வாகி டத்தோ ஷரோலுக்கும் மோதல்கள் வெடித்தது.

14. மாநில மேம்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட TIA – Terengganu Investment Autority, அதன் நோக்கத்திலிருந்து விலகி உள்ளரசியலில் சிக்கிக் கொண்டதால், திரங்கானு சுல்தான் கோபமடைந்தார். இதனால் TIA – Terengganu Investment Autority-யை கலைத்து விடலாம் என யோசனை செய்தார்.

15. இந்த சமயத்தில்(மார்ச் 2009-ஆம் ஆண்டு) தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தால் துன் படாவி பதவி விலக நேர்ந்தது. இதனையடுத்து டத்தோ ஸ்ரீ நஜிப் நாட்டின் 6-வது பிரதமராக பதவி ஏற்றார்.

16. பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நஜிப் TIA – Terengganu Investment Autority-யை மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டு வந்தார். அதன் ஆலோசகராக நஜிப் தன்னை தானே நியமித்துக் கொண்டு; TIA – Terengganu Investment Autority-யை நிதியமைச்சின் கீழ் செயல்ப்படுத்த முடிவு செய்தார். காபினெட் கூட்டத்தில் அனுமதியும் வாங்கினார்.

17. இதற்கு திரங்கானு சுல்தான் உடன்படவில்லை. TIA – Terengganu Investment Autority-வை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டால்; மாநிலத்துக்கு வர வேண்டிய பெட்ரோல் ராயல்டிக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சினார். இது மாநில வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கவலைப்பட்டார்.

18. TIA – Terengganu Investment Autority-யை கலைத்துவிட்டு; பழைய முறைப்படி ராயல்டி தொகையை பெற்று கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.

19. இந்த முடிவு நஜிப்-புக்கு சாதகமாக இல்லை. TIA – Terengganu Investment Autority-யை தொடர வேண்டும் என்றே நஜிப் விரும்பினார்.

20. TIA – Terengganu Investment Autority-யை அப்படியே பெயரை மாற்றி நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து தொடர்ந்து செயல்ப்படுத்தலாம் என்று ஜோ லோ நஜிப்-க்கு ஆலோசனை வழங்கினார். நஜிப்-க்கு இந்த ஐடியா பிடித்திருந்தது.

21. TIA – Terengganu Investment Autority-யை அப்படியே பெயர் மாற்றி 1 Malaysia Development Berhad(1MDB) என உருமாற்றம் செய்தார்.

 

1 Malaysia Development Berhad(1MDB)

  1. 25 செப்டம்பர் 2009-ஆம் ஆண்டு TIA – Terengganu Investment Autority அப்படியே 1 Malaysia Development Berhad(1MDB) என்று பெயர் மாற்றம் கண்டது. 1MDB நிதியமைச்சின் கீழ் பிரதமரின் ஆலோசனையின் கீழ் செயல்ப்பட்டது. இது முழுக்க முழுக்க நிதியமைச்சின் கீழ் செயல்ப்படும் அரசாங்க நிருவனம்.

2. TIA போன்ற ஒரு நிருவாக குழுதான் 1MDB-யிலும் உருவாக்கப்பட்டது. 1MDB-யில் எட்டு ஆலோசர்களும் (Board of advisors), ஒரு தலைமை ஆலோசகரும் (Chief Advisor), ஐந்து பேர்கள் கொண்ட இயக்குனர்கள் வாரியமும் (Board of Directors), ஒரு தலைமை நிர்வாகியும் (CEO) நியமிக்கப்பட்டனர்.

3. ஆலோசகராக நஜிப்-ப்பும், நிதியமைச்சின் சார்ப்பில் அப்போதைய இரண்டாவது நிதியமைச்சர் அகமாட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, மற்றும் முன்பு TIA-யில் தலைமை நிருவாகியாக (CEO) இருந்த Datuk Shahrol, 1MDB-யில் நியமிக்கப்பட்டார்.

1MDB மூன்று துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என முடிவானது. முதலீட்டு நிருவனம் (Investment Holdings), ரியல் எஸ்டேட் (Real Estate), எரிசக்தி தொடர்புடையவை (Energy releted). 1பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டது.

4. 1MDB-யின் முதல் கட்ட முதலீடாக அபுதாபியில் உள்ள பெட்ரோ சவுடி (Petro Saudi International Abu Dhabi) நிருவனத்துடன் ஏற்பட்டது. அபுதாபியின் பெட்ரோ சவுடியும் (Petro Saudi) 1MDB-யும் இணைந்து Joint Venture(JV) நிருவனம் தொடங்கினார்கள்.

5. அர்ஜெண்டினா மற்றும் துர்கிஸ்தான் நாட்டில் எண்ணை தொழிலில் ஈடுபடுவதற்கு 1MDB அபுதாபி Petro Saudi-யோடு இணைந்து, Joint Venture(JV) கம்பனி மூலம் முதலீடு செய்தது. உள்நாட்டிலும் சில எரிசக்தி நிருவனங்கள் (Power Plant) வாங்கப்பட்டது.

6. இப்படியாக 1MDB உருவாகி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முதலீடு செய்ய தொடங்கியது. இன்று 1MDB-யின் மொத்த கடன் தொகை 42 பில்லியன் ரிங்கிட். அதாவது RM42,000,000,000. இதற்கான வட்டி மட்டும் 3.9 பில்லியன். அதாவது RM 3,900,000,000.

1MDB-யில் யார்-யார் சம்பந்தப்படுள்ளார்கள்? (தொடரும்)

இது அநேகன் வாசகர் மதியழகன் தனிப்பட்ட கருத்தாகும். இது அநேகனின் நிலைப்பாடு அல்ல.. -ஆசிரியர்