Homeஉலகம்நைஜீரியாவில் கலவரம்; 80க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் கலவரம்; 80க்கும் மேற்பட்டோர் பலி

ஜோஸ், ஜூன் 25-

நைஜீரியா, பிளாட்டோவிலுள்ள பரிகின் லாடி பகுதியில் இரு இனங்களுக்கிடையே நேற்று ஏற்பட்ட கலவரத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்தக் கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாக முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனங்களுக்கிடையே மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more