அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலீஷ் பிரீமியர் லீக் – மென்செஸ்டர் யுனைடெட் கிண்ணத்தை வெல்லாது !
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் – மென்செஸ்டர் யுனைடெட் கிண்ணத்தை வெல்லாது !

மென்செஸ்டர், ஆக.15-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தை மென்செஸ்டர் யுனைடெட் நிச்சயம் கைப்பற்றாது என அதன் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் மென்செஸ்டர் யுனைடெட் இன்னமும் பலவீனமாக காணப்படுகிறது.

பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்வதில் மென்செஸ்டர் யுனைடெட் சிறப்பாக செயல்படவில்லை என போல் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். மென்செஸ்டர் சிட்டி ரியாட் மாஹ்ரேசை ஒப்பந்தம் செய்துள்ள வேளையில் லிவர்பூல் நாபி கெய்தா, பாபின்ஹோ, ஷெர்டான் சக்கிரி, கோல் காவலர் அலிசோனை ஒப்பந்தம் செய்துள்ளது.

எனினும் மென்செஸ்டர் யுனைடெட் பிரேசிலின் பிரெட், போர்ச்சுகலின் டியாகோ டாலோட், கோல் காவலர் கிரான்டை தவிர புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் லிவர்பூல், மென்செஸ்டர் சிட்டிக்கு , யுனைடெட் மிகப் பெரிய சவாலாக விளங்காது என ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.

கடந்த பருவத்தில் முதலிடத்தைப் பிடித்த மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் மென்செஸ்டர் யுனைடெட் 19 புள்ளிகளில் பின் தங்கியிருந்தது. இம்முறை அந்த குறையை மென்செஸ்டர் யுனைடெட் போக்கும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் ஸ்கோல்சின் கருத்து, மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன