தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக் காணவிருக்கும் வேளையில் விஜய்யின் 63 வது படத்தை இயக்குவதை இயக்குனர் அட்லீ உறுதிச் செய்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய்யின் அடுத்த படத்தை இயக்க விருப்பதாக தெரிவித்தார். இவர்களது கூட்டணியில் வெளியாகி இருந்த மெர்சல் படம் மெகா ஹிட் சாதனைகளை படைத்ததால் இந்த படத்திற்கு ஏக போக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தை பற்றி சில தகவல்களையும் அட்லீ பகிர்ந்து கொண்டுள்ளார். படத்தின் கதை மாஸாக பயங்கரமாக உருவாகிட்டு இருக்கு, விரைவில் அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.

மேலும் இதுவரை பயந்து பயந்து செய்யாமல் இருந்த ஒரு விசயத்தை தைரியமாக தளபதி 63 படத்தில் செய்ய உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.