த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது !

0
4

தமிழ் சினிமாவில் கடந்த 16 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறவிருக்கிறது. உலக நாயகன் கமல், இளைய தளபதி விஜய் , தல அஜித், விக்ரம் , சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள த்ரிஷா, சூப்பர் ஸ்டாருடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை.

அந்த ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. தற்போது ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ஏற்கனவே சிம்ரன் நடித்து கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு நாயகியாக த்ரிஷா இணைய விருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டில் திரைக்கு வர விருக்கும் இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.