இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

புதுடில்லி, ஆக. 16-

பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை வந்தார் வாஜ்பாய் இந்த நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் உயிர் பிரிந்தது.

2004-ஆம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005-ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2002-இல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும் பாராட்டைப் பெற்றது.

நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மரபுகளை புறந்தள்ளி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய். சமீபத்தில்தான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் பிதாமகரான வாஜ்பாயை இந்தியா இழந்துள்ளது.