சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சாதனைகள் படைத்த தமிழ்ச் சிங்கங்கள் !
முதன்மைச் செய்திகள்

சாதனைகள் படைத்த தமிழ்ச் சிங்கங்கள் !

கோலாலம்பூர், ஆக.16-
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து இந்திய சமூகத்திற்கு பெருமைச் சேர்த்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக அறிவியல் துறை சார்ந்த போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் அளப்பரியது என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த மூன்று நாட்களாக, கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 2018 அனைத்துலக புத்தாக்க ஆய்வுக் கண்காட்சி மற்றும் போட்டியில் பங்கெடுத்த ,நான்கு தமிழ்ப் பள்ளிகள் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கின்றன.
ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற ஜோகூர், மாசாய் தமிழ்ப்பள்ளி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பிரிவிலும் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. அதேவேளையில், ஜோகூரைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியான ,  யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி
 இயற்கை அறிவியல் பிரிவில் தங்கப் பதக்கமும் சிறப்பு விருதையும் வென்றது.
சிலாங்கூர் , பூச்சோங் தமிழ்ப்பள்ளி வாழ்நாள் அறிவியல் மற்றும் மருந்துக்கான பிரிவில் தங்கப் பதக்கத்தையும் சிறப்பு விருதையும் பெற்றது. இந்த பள்ளிகளைத் தவிர பூசாட் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி தங்கம் வென்ற வேளையில், ஜெஞ்சாரோம் , சிகாமாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கங்களை வென்றன. அதேவேளையில் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கம் வென்றது.
இதுபோன்ற போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெறுவதால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இவர்களின் வெற்றியின் மூலம் இதர பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும்.  அனைத்துலக ரீதியில் 56 பள்ளிகள் பங்கேற்ற வேளையில், இப்புத்தாக்க கண்காட்சி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கி இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன