வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என்பது எங்களின் கணிப்புதான்! – வேதமூர்த்தி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என்பது எங்களின் கணிப்புதான்! – வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஆக 17-

மலேசிய இந்தியர்களில் 3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என ஹிண்ட்ராப் கூறியது வெறும் கணிப்புதான் என அதன் தலைவர் வேதமூர்த்தி கூறினார்.

எண்ணிக்கை இப்போது முக்கியமல்ல. அடையாள ஆவணப் பிரச்னைகளைக் களைய எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதுதான் முக்கியமென அவர் மேலும் கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என ஹிண்ட்ராப் குற்றச்சாட்டியிருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 3,407 இந்தியர்களுக்கு சிவப்பு அடையாள அட்டைக்கு பதிலாக நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார். இதற்கு மறுமொழி தெரிவித்த கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ், குடியுரிமை இல்லாத 3 லட்சம் இந்தியர்களின் நிலை என்ன என்ற கேள்வியை முன்வைத்திருந்தார்.

இத்தருணத்தில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்பது ஹிண்ட்ராப் இயக்கத்தின் கணிப்புதான் என கல்வியில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் என்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட வேதமூர்த்தி தெரிவித்தார்.

அடையாள ஆவணப் பிரச்னைகளை எதிர்நோக்கும் நபர்கள் அதனை எளிய முறையில் அணுகும் வாய்ப்புகள் இங்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக பலதரப்பட்ட ஆவணங்களை கொண்டிருக்க வேண்டுமென்பதையும் முன்வைக்கின்றார்கள். இதுதான் இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைப்பதில் பலதரப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

இந்த நடைமுறைகளை எளிமையாக்கும் போது இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செடிக் அமைப்பின் அனைத்து நடைமுறைகளும் முழு ஆய்வு செய்யப்படும். பின்னர் அதில் முன்னெடுக்கப்படும் ஆக்ககரமான திட்டங்கள் தொடரும். சமுதாயத்திற்கு பயனளிக்காத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுமென்றும் ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன