வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பக்காத்தானின் 100 நாள் ஆட்சி: சுகாக்காம் கடும் அதிருப்தி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பக்காத்தானின் 100 நாள் ஆட்சி: சுகாக்காம் கடும் அதிருப்தி

கோலாலம்பூர், ஆக. 18-

பக்காத்தான் ஹராப்பானின் 100 நாள் வாக்குறுதியின் மீது மலேசிய மனித உரிமை ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

அது வாக்குறுதி அளித்த மனித உரிமை அம்சங்களின் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அதன் தலைவர் டான்ஸ்ரீ ரஸாலி இஸ்மாயில் தெரிவித்தார்.

அரசு, மனித உரிமை அம்சங்களில் எந்தவொரு முனைப்பும் காட்டாததும் அது சம்பந்தமாக எந்தவொரு கொள்கையையும் அறிவிக்காததும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிறார் திருமணத்தைத் தடுக்க அரசு முழுமையான நடவடிக்கையை எடுக்காதிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அந்தப் பிரச்னையில் ஒவ்வோர் அமைச்சும் மற்றொன்றைக் கைக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டு, இது தவிர்க்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அரசு தனது அனைத்து மட்டத்திலும், தரப்பிலும் மனித உரிமை அம்சங்களைப் புகுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரஸாலி கேட்டுக் கொண்டார்.

11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட நபரை இன்னும் கைது செய்யவில்லை. அந்த நபர் அந்தச் சிறுமி 7 வயதாக இருக்கும்போதே தாம் விரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன