வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி!

கோலாலம்பூர், ஆக. 27-

பக்காத்தான் ஹராப்பானின் 12 பேரோடு வாரிசான் சபாவின் ஒருவரும் மேலவையின் புதிய உறுப்பினர்களாக  பதவியேற்றனர்.

பிகேஆரிலிருந்து நால்வரும், ஜசெகவின் நால்வரும் பிரிபூமி பெர்சத்துவிலிருந்து இருவரும் அமானா நெகாராவிலிருந்து ஒருவரும் புதிய செனட்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

தேசிய காங்கிரசின் நிரந்தரத் தலைவரான இஸ்மாயில் யூசோப், பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யுஸ்மாடி முகமட் யூசோப், பெரா தொகுதித் தலைவர் மோனாலான் முகமட் மற்றும் லூமுட் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் அட்மிரல்(ஓய்வு) முகமட் இம்ரான் அப்துல் ஹமிட் ஆகியோர் பிகே ஆரைச் சேர்ந்தவர்கள்.

ஜசெகவின் பேரா தலைவர் வழக்கறிஞர் இங்ஙா கோக் சே, பினாங்கு செயலாளர் லிம் ஹுய் யிங், சரவாக் மாநில செயலாளர் அலான் லிங் சீ கியோங், கட்சியின் சபா கல்வி இயக்குநர் அட்ரியன் பானீ லாசிம்பாங் ஆகியோர் ஜசெகவைச் சேர்ந்தவர்களாவர்.

திரெங்கானு தலைவர் டத்தோ ரஸாலி இட்ரிஸ், கேலாங் பாத்தா தொகுதித் தலைவர் மாட் நாசிர் ஹாசிம் ஆகியோர் பிரிபூமி பெர்சத்துவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமானாவைச் சேர்ந்த ராஜ் முன்னி சாபுவும் வாரிசான் சபாவின் டத்தோ தியோடோர் டக்ளள் லின்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.

மேற்கண்ட அனைவரும் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதனிடையே அமானாவின் கிளந்தான் தலைவர் ஹுசாம் மூசாவின் பதவிப் பிரமாணம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டது.

இஸ்மாயில், இங்ஙா, லம் மற்றும் முகமட் யுஸ்மாடி ஆகியோர் மாநில சட்டமன்றங்கள் முன்மொழிந்த வேளையில் மற்றவர்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன