செவ்வாய்க்கிழமை, நவம்பர் 20, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கட்சித் தேர்தலில் ரபிஸி போட்டியிட முடியுமா? – டத்தோஸ்ரீ வான் அஸிஸா
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கட்சித் தேர்தலில் ரபிஸி போட்டியிட முடியுமா? – டத்தோஸ்ரீ வான் அஸிஸா

கோலாலம்பூர், ஆக. 27

இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்து கொள்ள முடியுமா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அஸிஸா இவ்வாறு தெரிவித்தார்.

சன் டெய்லியில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் கட்சித் தேர்தலில் போட்டியிட கட்சி விதிகள் அனுமதிப்பதில்லை என்று முதல் பக்கத்தில் வெளிவந்திருக்கும் செய்தி அறிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ரபிஸியைப் போட்டியிட அனுமதித்தால் பிகேஆர் பதிவு இரத்தாகும் அபாயம் இருப்பதாக ஒரு வட்டாரம் கூறியதாக சன் கூறியிருந்தது.

ரபிஸிக்கு 1எம்டிபி கணக்கறிக்கையை சட்ட விரோதமாக வைத்திருந்து, ஊடகங்களுக்கு அதைக் காண்பித்த குற்றத்துக்காக 2016-இல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய பீட்லோட் கார்ப்பரேசன் (என்எஃப்சி) மற்றும் அதன் தலைவர் முகமட் சாலேயின் வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக 30 மாதச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

அதே வேளை, சங்கப் பதிவதிகாரி ரபிசிக்குத் தேர்தலில் போட்டியிட சிறப்பு அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஒரு செய்தி. இதுவும் சன் நாளேட்டில்தான் வெளிவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன