Homeவிளையாட்டுஎனக்கு மரியாதைக் கொடுங்கள் - செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமுடன் வெளியேறிய மொரின்ஹோ !

எனக்கு மரியாதைக் கொடுங்கள் – செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமுடன் வெளியேறிய மொரின்ஹோ !

மென்செஸ்டர், ஆக.28-

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி என்ற முறையில் தமக்கு தமது ஆட்டக்காரர்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் மென்செஸ்டர் யுனைடெட் 0- 3 என்ற கோல்களில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மொரின்ஹோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரிடம் ஏற்பட்ட தோல்வியால், மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி எட் வூட்வேர்ட்டுடன் மொரின்ஹோவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அவர் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அந்த ஆருடத்தை மேலும் வலுவாக்கும் வகையில், ரியல் மாட்ரிட்டின் முன்னாள் பயிற்றுனர் சினிடின் சிடானும் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் தொடர்ந்து இணைத்துப் பேசப்படுகிறார். இருப்பினும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மொரின்ஹோ, தாம் மூன்று பிரீமியர் லீக் கிண்ணங்களை வென்றிருப்பதை சுட்டி காட்டினார்.

செல்சி கிளப்புடன் அந்த மூன்று பிரீமியர் லீக் கிண்ணங்களை வென்றுள்ள வேளையில் தற்போது பிரீமியர் லீக்கில் உள்ள எந்த நிர்வாகியும் அந்த சாதனையைப் படைத்ததில்லை என காட்டமாக கூறினார். எனவே எனக்கு உரிய மரியாதைக் கொடுங்கள் என கூறிய மொரின்ஹோ செய்தியாளார்கள் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

 

spot_img

latest articles

explore more