Homeமலேசியாகுற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார் டான் ஶ்ரீ பாலகிருஷ்ணன்!

குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார் டான் ஶ்ரீ பாலகிருஷ்ணன்!

ஜோகூர் பாரு, ஆக.28-

ம.இ.கா-வின் முன்னாள் உதவித் தலைவர் டான் ஶ்ரீ பாலகிருஷ்ணன், ஜோகூர் பாரு செஷன் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார். 2012 ஆம் ஆண்டுத் தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 60 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கள்ளப் பணத்தை மாற்றியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை 60 லட்சம் ரிங்கிட் பணத்தை கள்ளப் பணமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சின்னையா & சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான பாலகிருஷ்ணன் தமது நிறுவனத்துக்கு சொந்தமான அஃபின் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட அந்த பணத்தை வெளியில் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதே குறிப்பிட்ட காலத்தில் அவர் அந்த பணத்தை கள்ளப் பணமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  2001 ஆம் ஆண்டு கள்ளப் பண மாற்று சட்டம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு தடுப்பு சட்டத்தின் செக்‌ஷன் 4 உட்பிரிவு 1-ன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலகிருஷ்ணனுக்கு 50 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க சட்டம் வகை செய்கிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில்   அரசு தரப்பு துணை வழக்கறிஞர்  கஸ்ரின் ஹபிஸ் காலில் குற்றஞ்சாட்டிய வேளையில், பிரதிவாதியின் சார்பில் டத்தோ வி .மனோகரன், என், யுகேந்திர வழக்கில் ஆஜராகினர்.

 

spot_img

latest articles

explore more