வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கால்பந்து ஆட்டத்தில் களமிறங்கும் அதிவேக ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கால்பந்து ஆட்டத்தில் களமிறங்கும் அதிவேக ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்

மெல்போர்ன், ஆக 28
ஒலிம்பிக் போட்டியில் எட்டு முறை தங்கப் பதக்கங்களை வென்று உலக அளவில் திடல்தட போட்டிக்கு பெருமை தேடித் தந்தவர் உசைன் போல்ட்.

உலகின் அதிவேக ஓட்டப்பந்தைய வீரரான அவரின் கவனம் தற்போது கால்பந்து போட்டி பக்கம் திரும்பியுள்ளதால் ஆஸ்திரேலியாவின் சென்ட்ரல் கோஸ்ட் மரினெர்ஸ் கால்பந்து கிளப்பில் இணைந்திருக்கிறார்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆட்டத்தில் தமது திறமையை சோதிக்கவுள்ளார். தற்போது அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

ஓட்டப்பந்தையத்தில் மட்டுமின்றி கால்பந்து விளையாட்டிலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார் உசைன் போல்ட்.

தமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதற்கு அவர் தயாராய் இருக்கிறார்.

கால்பந்து விளையாட்டாளர்களை, காட்டிலும் ஓட்டப்பந்தையம் போன்று அதிவேகமாக ஓடி, கால்பந்து ஆட்டத்திலும் கோல் அடிக்கும் திறமை அவருக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன