Homeமலேசியா4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது மலேசியா !

4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது மலேசியா !

ஜக்கார்த்தா, ஆக.28-

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா தனது 4 ஆவது தங்கப் பதக்கத்தை இன்று கைப்பற்றியது. சற்று முன்னர் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கு சேப்பாக் தக்ராவ் ரெகு போட்டியில் மலேசியா 2- 1 என்ற செட்களில் உபசரணை அணியான இந்தோனேசியாவை வீழ்த்தியது.

முதல் செட்டில் 21-18 என்ற புள்ளிகளில் தோல்வி கண்ட மலேசிய சேப்பாக் தக்ராவ் அணி கடும் போராட்டத்துக்குப் பின்னர் இரண்டாவது செட்டில் 20-22 என்ற புள்ளிகளில் வென்றது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசியா, 21-11 என்ற புள்ளிகளில் இந்தோனேசியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

நேற்றைய தினம் சீலாட் போட்டியில் ஏமாற்றம் அடைந்த மலேசியாவுக்கு இந்த வெற்றி ஆறுதலை தந்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவடைய இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள வேளையில் மலேசியா இன்றைய தினம் முக்குளிப்பு போட்டிகளின் வழி மேலும் சில பதக்கங்களை வெல்ல இலக்குக் கொண்டுள்ளது.

spot_img

latest articles

explore more