ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கிளந்தானுடம் சமநிலை! மிஃபாவின் மலேசிய கிண்ண காலிறுதி கனவு நனவாகுமா?
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கிளந்தானுடம் சமநிலை! மிஃபாவின் மலேசிய கிண்ண காலிறுதி கனவு நனவாகுமா?

குவாந்தான், செப். 1-

மலேசிய கிண்ண காற்பந்துப்போட்டிகளில் முதன் முறையாக அனுபவம் இல்லாத நிலையில் களம் கண்டுள்ள மிஃபா அணியின் காலிறுதி கனவு நனவாகுமா? என சமுதாய பெருமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நமது சமுதாய அணி மிஃபா காலிறுதிக்குள் நுழைந்தால் அது ஓர் சரித்திரம் என பலர் கருத்துரைக்கிறார்கள்.

கிளந்தான் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றது ஏமாற்றம் என்றாலும் கூட நமது அணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில் களம் இறங்கி சமநிலையை பெற்றது வரவேற்கக்கூடியது.

நமது அணி 5 ஆட்டங்களை நிறைவு செய்து 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதனையடுத்து கெடா அணி ஜே.டி.தி யை வீழ்த்திய நிலையில் அந்த அணியும் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. ஜே.டி.தி அணி 6 புள்ளிகளையும், கிளந்தான் அணி 5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டத்தில் நமது அணி ஜே.டி.தி அணியையும், கெடா கிளந்தான் அணியையும் எதிர்கொள்கின்றன.

இந்த ஆட்டத்தில் நமது அணி ஜே.டி.தி அணியை வெற்றி கொள்ள வேண்டும் அல்லது சமநிலை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நமது அணி உள்ளது. அதற்கேற்ற நிலையில் தலைமைப்பயிற்றுநர் கே.தேவன் வியூகங்களை வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி ஆனாலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள சிறிய அணியாகிய நாம் பல ஜாம்பவான் அணிகளுக்கு நிகராக மலேசிய கிண்ண களத்தில் இருப்பது சாதாரண காரியம் அல்ல.தொடர்ந்து நமது அணி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க சமுதாயத்தினர்களாகிய நாம் தொடர்ந்து துணை நிற்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன