கோலாலம்பூர், செப். 1-

ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக செப்டம்பர் 1 தொடக்கம் எஸ்எஸ்டி வசூலிப்பு தொடங்கினாலும் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மலேசியா கினி இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்பட்டாலும் தற்போது வரை அடிப்படை பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அது குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் உணவகங்களிலும் விலை ஏற்றம் செய்யப்படவில்லை என்பதையும் மலேசியா கினி சுட்டிக் காட்டியுள்ளது. இதுவரையில் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி பொருட்களின் விலை உயர்த்தப்படுமானால் அது வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே அறிவிக்கப்படுமென கெடாவில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக மெர்னாமா சுட்டிக் காட்டியுள்ளதை மலேசியா கினி செய்தியாக வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மலேசியாவிலுள்ள முதன்மை மாநிலங்களில் இந்த எஸ்எஸ்டி வரி குறித்து ஆய்வு நடத்தியுள்ள மலேசியா கினி, பொருட்களின் விலையில் மாற்றமில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.