அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஸ்பெயின் லா லீகா : ரியல் மாட்ரிட் வெற்றி ; அத்லேட்டிக்கோ மாட்ரிட் தோல்வி !
விளையாட்டு

ஸ்பெயின் லா லீகா : ரியல் மாட்ரிட் வெற்றி ; அத்லேட்டிக்கோ மாட்ரிட் தோல்வி !

மாட்ரிட், செப்.2 – 

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் , 4 – 1 என்ற கோல்களில் லெகானேஸ் அணியை வீழ்த்திய வேளையில் அத்லேட்டிக்கோ மாட்ரிட், இந்த பருவத்தில்  தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடந்த ஆட்டத்தில் கேரத் பேல் , மூலம் ரியல் மாட்ரிட் தனது முதல் கோலைப் போட்டது. முதல் பாதி ஆட்டம் 1 – 0 என்ற கோலில் ரியல் மாட்ரிட்டுக்கு சாதகமாக முடிந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கரீம் பென்சீமா இரண்டு கோல்களைப் போட்டார்.

ஹாட்ரீக் கோல்களைப் போட, பென்சீமாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.எனினும் இரண்டாம் பாதியில் கிடைத்த பினால்டி வாய்ப்பை கேப்டன் செர்ஜியோ ராமோஸ், பறித்துக் கொண்டதால் பென்சீமாவின் ஹாட்ரீக் கனவு கலைந்தது.  இந்த பருவத்தில் ஸ்பெயின் லா லீகா போட்டியில் ,  பென்சீமா  இதுவரை 4 கோல்களைப் போட்டிருக்கும் வேளையில், கேரத் பேல் , மூன்று கோல்களைப் போட்டிருக்கிறார்.

இதனிடையே அத்லேட்டிக்கோ மாட்ரிட் 0 – 2 என்ற கோல்களில் செல்தா வீகோவுடம் தோல்வி கண்டது. இது ஓர் அதிர்ச்சி தரும் முடிவு என்று அத்லேட்டிக்கோ மாட்ரிட் பயிற்றுனர்  டியாகோ சிமியோனே தெரிவித்துள்ளார். இந்த பருவத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட்டுக்கு கடும் சவால் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அத்லேட்டிக்கோ மாட்ரிட் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த வேளையில் இரண்டாம் பாதியில் மக்சிமிலியோனோ கோமேஸ் போட்ட கோலின் மூலம் செல்தா வீகோ முன்னணிக்குச் சென்றது. ஹியூகோ அஸ்பாஸ் போட்ட கோல் அத்லேட்டிக்கோ மாட்ரிட்டின் தோல்வியை உறுதிச் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன