சென்னை, செப். 2-

திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் மரியாதை நிமிர்த்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியான திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளதற்காக அவருக்கு டத்தோ சரவணன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

முக ஸடாலினை நேரில் சந்தித்தப்போது டத்தோஸ்ரீ சரவணன் அவருக்கு பூங்கொத்தை வழங்கி தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியான திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அண்மையில் முதுமை காரணமாக காவேரி மருத்துவமனையில் காலமானார்.

அன்னாரின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தப்போது, டத்தோஸ்ரீ சரவணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, முக ஸ்டாலினுக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார்.