வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஸ்ரீ அபிராமி!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ஸ்ரீ அபிராமி!

கோலாலம்பூர், செப்.  2-

பனித்தரையில் நடனமாடும் ஸ்கெட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற ஸ்ரீ அபிராமி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சனிக்கிழமை அவருக்கு அதற்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

ஸ்கெட்டிங் விளையாட்டில் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற சாதனையை அவர் நிகழ்த்தியதற்காக அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிய ஸ்கெட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் ஸ்ரீ அபிராமி (வயது 6) 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

தாய்லாந்தின் பேங்காக் நகரில் ஆகஸ்ட் 5 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். இளம் வயதில் உலகளாவிய நிலையில் அவர் செய்த சாதனை மலேசிய இந்தியர்களை பெருமைப்படுத்தியது.

குறிப்பாக இந்த வெற்றியை இந்நாட்டின் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு சமர்ப்பிப்பதாக அவரது தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். அதே போல் தற்போது ஸ்ரீ அபிராமி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது தமக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள சந்திரன் இதனை மலேசியர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

வரும் காலங்களில் ஸ்ரீ அபிராமி இதே போல் பல சாதனைகளை புரிவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் மலேசிய கொடி பொரித்த ஆடையுடன் ஸ்ரீ அபிராமி தனக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன