வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நிச்சயமாக அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் – துன் டாக்டர் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

நிச்சயமாக அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் – துன் டாக்டர் மகாதீர்

பண்டார் ஸ்ரீ பெகாவான், செப். 3

உறுதியளித்தப்படி பிரதமர் பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர்  துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இரு ஆண்டு காலத்திற்கு இடைக்காலப் பிரதமராய் இருப்பேன் என கூறியதையும் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று புருணைக்குத் தொழில் நிமித்தமாக வருகை தந்தபோது அங்குள்ள மலேசியர்களுடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் தெரிவித்தார்.

நாட்டை வழிநடத்த தவறான ஒருவரைத் தேர்ந்தெடுத்தது மீண்டும் நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அப்படி மக்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை என்றால் அடுத்தப் பொதுத்தேர்தலில் அதை அவர்கள் காட்டலாம் என்று அவர் சொன்னார்.

இதற்கு முன் ஆர்ப்பாட்டம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்படுத்துதல், போலீஸ் புகார், அரசின் தலைமைத்துவத்தை மக்கள் நிராகரித்தல் போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதும் பொதுத்தேர்தலில் மக்கள் தீர்மானிக்கும் வரை அவற்றில் வெற்றி காணவில்லை. தம்மை ஒரு அதிதீவிர மலாய்க்காரர் என்று குற்றஞ்சாட்டப்படுவதையும் மகாதீர் மறுத்தார்.

பல்லின மக்களிடையே பகை, கலவரம் ஏற்படும் அளவிற்கு மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தாம் எப்போதும் நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அவர் சொன்னார்.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் இன விவகாரங்கள் நிகழத்தான் செய்யும். இருப்பினும் புதிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நாட்டிற்குப் பகைமையை ஏற்படுத்தி விடாது என மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன