Homeமலேசியாஇரு ஊழல் வழக்குகள்: லிம் குவான் எங்- பாங் லி கூன் விடுதலை

இரு ஊழல் வழக்குகள்: லிம் குவான் எங்- பாங் லி கூன் விடுதலை

ஜோர்ஜ்டவுன், செப் 3-

மாநில நிலத்தின் தகுதியை மாற்றியது, சந்தை விலைக்கு குறைவான விலையில் பங்களா வீட்டை வாங்கியது ஆகிய இரு ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் பெண் தொழிலதிபர் பாங் லி கூனை பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இந்த வழக்கிலிருந்து அரசு தரப்பு வழக்கரிஞர் முகமட் மஸ்ரி டாவுட் நிபந்தனையுடனான விடுவிப்பு அளிக்கும்படி கோரினார். இருப்பினும், உயர்நீதிமன்ற நீதிபதி ஹாட்ஹாரியா சைட் இஸ்மையில் அவர்களை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து முழுமையாக விடுவிக்க முடிவு செய்தார்.

இந்த வழக்கிற்காக அவர்கள் மீண்டும் அழைக்கப்படமாட்டார்கள். இருவரும் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர் என்று நீதிபதி ஹாட்ஹாரியா சைட் தீர்ப்பளித்தார்.

spot_img

latest articles

explore more