ஐஐயுஎம்மின் தலைவராக மஸ்லீ நியமனம்; மறு பரிசீலனை செய்யப்படும் -துன் மகாதீர்

0
3

பெட்டாலிங் ஜெயா, செப்.7
ஐஐயுஎம் எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலவியமைச்சர் மஸ்லீ மாலிக்கின் பதவி மறுபரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதை அலட்சியப்படுத்த முடியாது என அவர் சொன்னார்.

அந்த நியமனம் கல்மேல் எழுதியது இல்லை. அதனை மறு பரிசீலனை செய்யலாம் என பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரீஸால் மெரிக்கான் நைனா மெரிக்கானும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினரான லிம் யி வே ஆகியோர், மஸ்லீ அந்த நியமனத்தைத் துறக்க வேண்டுமென்றும் அது அவரின் பொதுச் சேவையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.