கோல திரெங்கானு, செப் 9
பிகேஆர் கட்சி 20 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வெளிப்படையாக போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறது என அதன் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
எந்த விவகாரமாக இருந்தாலும் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அனைத்தையும் திறந்த மனப்போக்குடன் கட்சி தனது உறுப்பினர்களிடம் கூறி விடுகிறது என்று அவர் கூறினார்.
இங்குள்ள பெல்டா குடியிருப்புப் பகுதியில் கட்சியின் 20ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது ரபிஸி இவ்வாறு குறிப்பிட்டார்.
கட்சித் தேர்தலில் 9 லட்சம் பேர் வாக்களிப்பர். இதில் வெற்றி சகஜம்தான். கட்சியை வலுப்படுத்துவதற்குத்தான் உறுப்பினர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதில் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார்.


