அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசியாவில் சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்புக் காட்சி!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்புக் காட்சி!

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சீமராஜா. இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடூ காண்கின்றது. இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

மலேசியாவில் முதன்மையான 3 திரையரங்குகளில் இதன் முன்னோட்டக் காட்சி ஒளிபரப்படுகின்றது. தலைநகரில் என்யூ சென்ரல், ஜோகூர் பாருவில் எல்எப்எஸ் ஸ்கூடாய், எல்.எப்.எஸ் சித்தியான் ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தால் திரையிடப்படவுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ‘ரஜினிமுருகன் என இரண்டு வெற்றிகளைக் குவித்த சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணி மூன்றாவதாக சேர்ந்துள்ளது. இதில் மற்றொரு ஒற்றுமை பொன்ராம் போலவே ஆர்.டி ராஜா – சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படமும் இதுதான்.

24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, மனோபாலா, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக டி.இமான் பாடியுள்ள மச்சக்கன்னி மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள உன்னைவிட்ட யாரும் எனக்கில்லை பாடல்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இத்திரைப்படத்திற்கு பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன