திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 26ஆவது ஐ.பி.எஃப் பேராளர் மாநாடு -டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடி சிறப்பு வருகை
அரசியல்முதன்மைச் செய்திகள்

26ஆவது ஐ.பி.எஃப் பேராளர் மாநாடு -டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடி சிறப்பு வருகை

செர்டாங், செப்.11-

ஐ.பி.எஃப் கட்சியின் 26ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் 16ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதன் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுமையும் இருந்து 800 பேராளர்கள் கலந்து கொள்வர்.

தேசிய முன்னணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆக்கப்பூர்வ தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று சம்பந்தன் குறிப்பிட்டார். 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் அமைப்பதில் தோல்வி கண்டாலும் ஐ.பி.எஃப் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் என்றும் அவர் கூறினார்.

அதே வேளையில், தேசிய முன்னணி கூட்டணியில் உறுப்புக் கட்சியாகச் சேரும் தனது முயற்சியையும் இக்கட்சி தொடரும் என்று அவர் தெரிவித்தார். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெறுவதற்கு ஐ.பி.எஃப் உறுப்பினர்கள் இக்கூட்டணிக்குத் தொடர்ந்து தோள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணியின் புதிய தலைவரான ஸாகிட் ஹமிடி கட்சியின் மேம்பாட்டிற்காக புதிய இலக்குகளை வகுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இங்குள்ள விஸ்மா ஐ.பி.எஃப் தலைமையகத்தில் காலை மணி 9.00க்கு நடைபெறும் ஐ.பி.எஃப் மாநாட்டில் பேராளர் அனைவரும் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன