வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > திரைப்பட நடிகர் நகுல் தலைமையில் டுருப் செங்கெட் வழங்கும் ‘சிலிட் இசை ஆல்பம் வெளியீடு
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

திரைப்பட நடிகர் நகுல் தலைமையில் டுருப் செங்கெட் வழங்கும் ‘சிலிட் இசை ஆல்பம் வெளியீடு

கோலாலம்பூர், செப். 11-

மலேசியாவின் முன்னணி கலைஞர்களான கதிர் கிரங்கி, ஹார்டி பீ, ரோபன் டெ பிளேக், ரகுவரன் ஆகியோரின் கூட்டணியில் டுருப் செங்கெட் வழங்கும் சிலிட் இசை ஆல்பம் இம்மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவிருக்கின்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பாய்ஸ் பட நடிகர் நகுல் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொள்கிறார்.

தனிப்பட்ட முறையில் மலேசியா மட்டுமின்றி உலக அரங்கில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் தனிநபர் பாடல்களையும் வெளியிட்டு பிரபலமான இந்த 4 பேரும் ஒன்றாக இணைந்து இந்த இசை ஆல்பத்தை வெளியிடுவதால் இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும், குறிப்பாக மலேசிய இசைக் கலைஞர்களின் படைப்புகள் தம்மை வியக்க வைப்பதாகவும் நடிகர் நகுல் தமது சமூக தளத்தில் விடீயோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி லி குவாட்ரி தங்கும் விடுதியில் இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது. ‘SENGET LIKE THATஎன்ற தலைப்பில் இந்த இசை ஆல்பம் வெளியிடப்படுகின்றது. இதில் மொத்தம் 6 பாடல்கள் அடங்கியுள்ளன என்று கதிர் கிரங்கி கூறினார். இந்த ஆல்பத்தில் 4 ஆண் பாடகர்கள் மட்டுமே பாடியுள்ளோம். இதன் வெற்றிக்குப் பிறகு திறமையான பாடகிகளுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். குறிப்பாக இதில் மெலோடி பாடலும் உண்டு. அதோடு ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்தது என அவர் மேலும் கூறினார். இந்த ஆல்பத்திற்கான தொடக்க வேலைகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. இப்போதுதான் இதை வெளியிடுவதற்கு சிறந்த தருணம் கிடைத்துள்ளதாகவும் ரோபன் டெ பிளேக் கூறினார்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சொல்லாதடி பாடலை முன்னமே யூடியூப்பில் வெளியீடு செய்தோம். இதற்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்கினார்கள். இந்த விடீயோவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவிருக்கின்றது. குறிப்பாக ராகாவில் இப்பாடல் தொடர்ந்து 5 வாரங்களாக சிறந்த 10 உள்ளூர் பாடல்கள் வரிசையில் முதலிடம் பிடித்திருந்தது என ரகுவரன் கூறினார்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களையும் படத்தொகுப்பில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். இதுவரையில் சொல்லாதடி பாடல் முழு வடிவம் பெற்றுள்ளது. அடுத்து இதர 5 பாடல்களையும் வீடீயோ வடிவில் உருவாக்க முடிவு செய்துள்ளதாக ஹெர்டி பி கூறினார். இந்த இசை வெளியிட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக இதன் விஐபி டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. 20 வெள்ளி டிக்கெட்களில் 30 விழுக்காடு மட்டுமே இன்னும் மீதமுள்ளது. ரசிகர்கள் மகத்தான ஆதரவு வழங்கி வருவதால் இந்த இசை நிகழ்ச்சியில் 1300 பேர் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்கின்றோம். இந்த நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட குலுக்கும் உண்டு என கதிர்  தெரிவித்தார். இந்த இசை ஆல்பம் முழுமை பெறுவதற்கு பல நல்லுள்ளங்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக ரகுவரனின் தந்தை தொழிலதிபர் சுப்ரமணியம் முழுமையாக இதுவரையில் உதவி புரிந்து வருகிறார். அவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன