Homeமலேசியாபோர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் போட்டி

போர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் போட்டி

கோலாலம்பூர், செப். 12-
பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வழிவிடும் வகையில் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலி செய்யப்படுமென பிகேஆர் கட்சியின் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.

நெகிரி செம்பிலானில் உள்ள தொகுதியில்தான் அன்வார் போட்டியிடுவார் என்ற ஆரூடத்திற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ டன்யால் பாலகோபால், போர்ட்டிக்சன் தொகுதியை டத்தோஶ்ரீ அன்வாருக்காக விட்டுத் தருவதாக அறிவித்தார்.

முன்னதாக மே மாதம் நடந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோ டன்யால் பாலகோபால் 36,225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.இ.கா. வேட்பாளர் டத்தோ வி.எஸ். மோகனுக்கு 18,515 வாக்குகள் கிடைத்தன. பாஸ் வேட்பாளர் மாசூப் ரோஸ்லான் 6,594 வாக்குகள் பெற்றார்.

spot_img

latest articles

explore more