கோலாலம்பூர், செப் 11
எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 5 ரக கார்களின் விலை குறைந்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
பெரோடுவா, ஹோண்டா, தோயாத்தா, பிஎம்டபல்யூ, மற்றும் வோல்ஸ்வேகன் ரக கார்களின் விலை வெ.3000 வரை குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியோடு ஒப்பிடுகையில் தற்போது பல ரக கார்களின் விலை குறைந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.
ஜிஎஸ்டி வரியோடு ஒப்பிடுகையில் நாம் அதிகமான பணத்தை வசூல் செய்யவில்லை. பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. மக்களின் நலன் கருதி இவை அனைத்தும் செய்யப்பட்டது என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியின் போது வெ.41, 497ஆக இருந்த புரோட்டோன் அக்சியா கார் வெ.40,390ஆக குறைந்துள்ளது.
மைவி 1.5 வெ.54,090 இருந்து வெ.55,300க்கும், ஹோண்டா ஜேஸ் 1.5 வெ.85,750 இருந்து வெ.83,633க்கும், தோயாத்தா வியோஸ் வெ.93,980 இருந்து வெ.93,200 க்கும், வோல்ஸ்வேகன் வெ.76,888 இருந்து வெ.74,900க்கும், குறைந்துள்ளது.
இதற்கு முன் வெ.188,800ஆக இருந்த பிஎம்டபல்யூ கார் வெ.3000 விலை குறைந்து வெ.185,800 ஆக உள்ளது.


