சென்னை, செப் 13
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளியாகியுள்ளது.

‘எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளிவந்த பிறகு 37 நிமிடங்கள் கழித்து தான் 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. ஆனால், விஜய் நடித்த மெர்சல் பட டீசர் 15 நிமிடத்திற்குள் எட்டிய சாதனையை 2.0 டீசரால் நெருங்க கூட முடியவில்லை.

2.0 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனித்தனியாக ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இந்தப் படத்தின் டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழில் முதல் ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகள், 139K லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

இதனால், ரஜினி படத்தின் டீசர் கூட விஜய் படத்தின் டீசரை நெருங்க முடியவில்லை என்று விஜய் ரசிகர்கள் மீஸ்களை தயாரித்து சமுக வலைத்தளங்களில் பரப்பி மகிழ்கின்றனர்.