Homeமலேசியாசட்டவிரோத வாகன உரிமம் வைத்திருப்போருக்கு ஒரு மாத அவகாசம்

சட்டவிரோத வாகன உரிமம் வைத்திருப்போருக்கு ஒரு மாத அவகாசம்

புத்ரா ஜெயா, செப்.13
லேசன் தெர்பாங் எனப்படும் சட்டவிரோத வாகன உரிமங்களை திரும்ப ஒப்படைக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத வாகன உரிமங்களை பெற்றவர்கள் அவற்றை ஒரு மாதத்திற்குள் திருப்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வாகனமோட்டும் உரிமங்களை ஒப்படைக்காதவர்களை தேடி கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதே வேளையில், எழுத்துப்பூர்வ சோதனைக்கும் வாகனமோட்டும் சோதனைக்குச் செல்லாமலும் பணத்தை மட்டும் கொடுத்து பெறப்பட்ட உரிமங்களையே லேசன் தெர்பாங் என கூறப்படுகிறது.

இவ்வாறு உரிமங்களை பெற்ற 14,000 பேரில் பெரும்பான்மையினர் மலேசியர்கள்தான். அதில் சீனா உட்பட அந்நிய பிரஜைகளும் உள்ளனர்.

spot_img

latest articles

explore more