ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > விமர்சனங்களை வரவேற்பேன் ஆனால் அவதூறுகளுக்கு மதிப்பளிக்க மாட்டேன் பால கணபதி வில்லியம்
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

விமர்சனங்களை வரவேற்பேன் ஆனால் அவதூறுகளுக்கு மதிப்பளிக்க மாட்டேன் பால கணபதி வில்லியம்

பெட்டாலிங் ஜெயா, செப் 14-

எனது திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன். அதேநேரத்தில் உண்மைக்குப் புறம்பான அவதூறுகளுக்கு ஒருபோதும் மதிப்பளிக்க மாட்டேன் என நீயும் நானும் திரைப்படம் இயக்குநர் பால கணபதி வில்லியம் (BGW) கூறினார்.

ஒரு திரைப்படம் நன்றாக இருக்கின்றது என முகத்திற்கு நேராக புகழ்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் விமர்சனகளுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்குவேன். அந்த தரமான விமர்சனங்களை அனைத்து நிலைகளிலும் என்னை இன்னமும் வலிமைப்படுத்துமென அவர் தெரிவித்தார்.

தவறுகளை திருத்திக் கொள்வதற்கு விமர்சனங்களுக்கு நான் முன்னுரிமை வழங்குகின்றேன். ஆனால் அவதூறுகளை நான் மதிப்பதில்லை. குறிப்பாக நீயும் நானும் திரைப்படம் முழுக்க முழுக்க மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுதான். இதன் டப்பிங் வேலைகளும் பாடல்களும் படத்திற்கான பின்னணி இசையும் இங்குதான் உருவாக்கப்பட்டது. அதை நமது மண்ணில் மைந்தர்கள்தான் உருவாக்கினார்கள்.

இது முழுக்க முழுக்க மலேசியத் திரைப்படம் என நான் கூறுவதால் சிலர் கோபப்படுகிறார்கள். அதை நான் கண்டு கொள்வதில்லை. உண்மையை சொல்வதற்கு நான் எப்போதும் அஞ்சுவதில்லை என பாலா குறிப்பிட்டார். முன்னதாக பால கணபதி வில்லியம்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நீயும் நானும் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி பி.ஜே, ஸ்டேட்டில் திரையிடப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாலா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே நீயும் நானும் இசை வெளியிட்டு விழாவில் BGW சோக்ஸ் (காலுறை) அணியாமல் இருந்த நிழல்படம் சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரத்தை தமது திரைப்படத்திற்கான விளம்பரமாக மாற்றினார் BGW. இது கீழ்தரமான விளம்பரம் என சில கூறினார்கள். இது கீழ்தரமான விளம்பரம் அல்ல. குறைந்த செலவில் செய்யப்பட்ட விளம்பரம் என BGW கூறினார். அதேபோல் தான் இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜஸ்மினுடன் திருமண கோலத்தில் BGW உள்ள நிழல்படமும் வைரலாகப் பரவியது. இவை அனைத்தும் திரைப்படத்திற்கான விளம்பரம் என்றார் BGW.

நீயும் நானும் திரைப்படம் வெற்றி பெற உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் இத்திரைப்படத்தின் நடிகர்களுக்கும் BGW தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இத்திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்கின்றது. (இத்திரைப்படத்தின் விமர்சனம் 20ஆம் தேதி வெளியிடப்படும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன