செவ்வாய்க்கிழமை, நவம்பர் 20, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > போர்ட்டிசனில் அன்வார் போட்டி! டத்தோ அம்பிகா அதிருப்தி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

போர்ட்டிசனில் அன்வார் போட்டி! டத்தோ அம்பிகா அதிருப்தி

கோலாலம்பூர், செப். 14-

பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காகப் போர்ட்டிக்சன் தொகுதி காலி செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் அதிருப்தி அடைந்துள்ளார்.

அன்வாருக்காக அவரின் மனைவி அல்லது மகள் தொகுதியைக் காலி செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் கருத்துரைத்துள்ளார்.

அன்வார் திரும்பி வருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. அவருக்கு அந்த உரிமை உண்டு. ஆனால், அவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அவரது தொகுதியை விட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து என்றார் அவர்.

அன்வாரின் மனைவியும் துணப் பிரதமருமான டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவரின் மகள் நூருல் இஸ்ஸா பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

அன்வார் இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ஏதுவாக பிகேஆரின் டேனியல் பாலகோபால் அப்துல்லா தனது போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியைக் காலி செய்வதாக புதன்கிழமை அறிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன